பாணந்துறை பொலிஸ் தடுப்பிலிருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இல்லை

115 0

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபர் ஒருவரின்  மரணம் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது .

இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என உயிரிழந்தவரின்  சகோதரர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் நகை திருடிய குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 14ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது .