மீரிகம விஜய ரஜதஹன வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றி ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுப் பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த ஒருவர் மீரிகம ஆதார வைத்தியசாலையிலும் மற்றைய இருவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

