உயிரிழந்தது மகாநாயக தேரரா..? மஹிந்த ராஜபக்சவா..?

238 0

உயிரிழந்தது வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகாநாயக தேரரா..? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவா..? என மக்களிடத்தில் சந்தேகம் ஏற்படும் என அமைச்சர் ராஜிதசேனரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது “காலமான அமரபுர மகா நிக்காயவின் வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகா நாயக தேரரின் பூதவுடல் கொண்டு வரப்பட ஆயத்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழி நெடுகிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் தாங்கிய பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து பதிலளித்த, அமைச்சர் ராஜிதசேனாரத்ன “அவ்வாறு உருவப்படங்களை பார்க்கும் போது மஹிந்த ராஜபக்சவா உயிரிழந்துவிட்டார் என மக்கள் குழப்பமடைவார்கள்”

“எவ்வாறாயினும், அவர்களின் அரசியல் நிலையும் இது தான். ஒருவருடைய மரணத்திலும் அரசியல் இலாபம் அடைவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.