கிடைக்கும் ஒற்றை தொகுதியை கைப்பற்றவே போராட வேண்டிய நிலையில் வேறு தொகுதிகளில் போட்டியிட அழைப்பதை நினைத்து சிரிக்கவா அழவா என்று தெரியாமல் தவிக்கிறது ம.தி.மு.க.தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளனர்.
வைகோவின் மகன் துரை வைகோ முதல் முறையாக போட்டியிட விரும்புவதால் அந்த தொகுதியை வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.அந்த ஒரு தொகுதியாவது கட்டாயம் வேண்டும் என்ற மன நிலையில் ம.தி.மு.க. இருக்கிறது.இந்நிலையில் துரை வைகோ திருச்சி எங்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே 2004-ல் எல்.கணேசன் போட்டியிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் கோவை சரளா கூறுவது போல என்னை திருவாரூர்ல கூப்பிட்டாக… பொன்னமராவதியில கூப்பிட்டாக… அவ்வளவு ஏன் காரைக்குடி பார்ட்டியில கூட கூப்பிட் டாக.. என்பது போல் விருதுநகருக்கு வாங்க, மயிலாடுதுறைக்கு வாங்க என்று கட்சியினர் வற்புறுத்துவதாக துரை வைகோ கூறி உள்ளார்.
கிடைக்கும் ஒரு சீட்டில் என்னதான் செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.இதற்கிடையில் திருச்சியை சேர்ந்த கட்சியின் துணை பொது செயலாளரான டாக்டர் ரொக்கையோ என்ற பெண் நிர்வாகி திருச்சி தொகுதி தனக்குத் தான் என்பது போல் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்ணன் துரை வைகோ பம்பரம் சின்னத்தில் வாக்கு கேட்க வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

