சென்னையில் இளைஞர் ஆணவக்கொலை: 4 பேர் கைது

126 0

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீண் என்பவர் வீட்டிற்கு தெரியாமல் ஷர்மி என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், தற்போது ஷர்மியின் சகோதரர் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீணை கொலை செய்துள்ளார்.

பள்ளிக்கரணை மதுபான விடுதியில் நேற்று இரவு கொலை நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கரணை பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.