தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன!

369 0

பனாமா கொடியுடனான கொள்கலன் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் நேற்று தீ பற்றிக் கொண்ட நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், டெனீலா எனும் குறித்த கப்பலுக்கு அருகில் நெருக்குவது சிரமமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் முழுமையாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.