இராமநாதன் கண்ணன் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடாது

373 0

இராமநாதன் கண்ணனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யும் செயற்பாடுகளில் தலையிடாதிருக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று கூடிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அமல் ரண்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதன் கண்ணனுக்கு நியமனம் வழங்கிய போது, மத்தியஸ்தம் செய்யாமையாலேயே, தற்போது அதனை இரத்துச் செய்வது குறித்த சர்ச்சையிலும் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடவில்லை என தெரியவந்துள்ளது.