யேர்மனியை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்.

1293 0

பெல்சியத்தில் இருந்து Luxemburg நாட்டை வந்தடைந்த ஈருருளிப்பயணம் Luxemburg நாட்டின் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பை முடித்துக் கொண்டு யேர்மனிய எல்லைக்குள் வந்தடைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது. 21.2.20204 புதன்கிழமை யேர்மனிக்குள் டில்லிங்கன் என்னும் நகரத்தை வந்தடைந்தது. அடுத்த நாள் 22.2.2024 வியாழக்கிழமை இன்று அகவணக்கத்துடன் தமது போராட்டத்தை ஆரம்பித்த மனிதநேய  செயற்பாட்டாளர்கள் சார்புறுக்கன் நகரை வந்தடைந்து, அங்கு சார்புருச்சன் நகரபிதாவின் அலுவலகத்தில் அவருடைய அதிகாரியைச் சந்தித்து மனுவினைக் கையளித்து கலந்துரையாடினர். பின்பு இப்போது யேர்மனி லன்டோ நகரத்தை நேக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இந்த அறவழிப்போராட்டமானது 04.03.2024 அன்று ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது. தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக வாழும் நாம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும். எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.