கடும் வறட்சியால் தெனியாய கிரிவெல்தொல வனப்பகுதியில் தீ பரவல்

128 0

கொடபொல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெனியாய கிரிவெல்தொல பகுதி காட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) தீ பரவியுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக தீ பரவியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இந்த திடீர் தீ பரவல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . குறித்த தீ பரவலினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளது.