குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது !

157 0

மீகொடையில் இடம்பெற்ற  துப்பாக்கி சூடு மற்றும் பூகொடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஆகிய குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விஜேசிங்க முடியன்சேலாகே தினேஷ் அவிஷ்க என்பவராவார்.சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மீரிஹான குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.