மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

283 0

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான உபகரணங்ககளும் வழங்கப்பட்டன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான உபகரணங்களை பாடசாலைக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் கே.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் டி.யுவராஜன், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.