வன விலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாப்பதற்காக தான் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அட்டவீரகொல்லவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலிக்கம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த இவர் அயலவர்களால் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

