நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

215 0

 

நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டவருவதாகக் கூறி ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் நடைபெறுகின்றன.நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்.

கடந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டுமென கூறியவர்கள் என்ற வகையில் நாமும் பல தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.நாடென்ற வகையில் இதனை எம்முடைய பொதுமக்கள் மறந்துவிட்டார்கள்.

இவ்இன்னல்களால் பாதிப்புற்ற ஒரு சிலரிற்கு மாத்திரமே இவ்விடயம் தொடர்பாக நினைவிருக்கும்.

நாம் இன்று அமைச்சரவைக்குச் சென்றவுடன் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்களை விமர்சிக்கும் உரிமை எமக்குள்ளது.

அதன் பொருட்டு ஜனநாயக உரிமைகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் நான் ஒரு சில தடவைகள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்.அங்கு எமக்கு நல்ல வரவேற்பிருந்தது.இந்நிலையானது 2005ஆம் ஆண்டில் மாற்றங்கண்டது.

இவ்வமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எவருக்கும் விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.விமர்சனங்களை முன்வைக்க முன்வரும் பொழுது அதனை தடுப்பதற்கு வேறு குழுக்கள் இருந்தன.தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இன்று இந்நிலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று எம்மால் கருத்துக்களை வெளியிடலாம்.

நாட்டில் அழிவொன்று ஏற்படுமாயின் அதனை தடுத்து நிறுத்தலாம்.இவ்வனைத்து காரணிகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நான் திருப்தியடையவில்லை.ஜனவரி 8ஆம் திகதி நாம் அனைவரும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு  குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குவதற்கு ஒன்றினைந்தோம்.

இவ்விடயம் தொடர்பாக நான் கவலைக்கொள்கின்றேன்.

அன்று திருட்டுச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள் இன்று தப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

அன்று துறைமுகத்தில் அதிகளவு திருட்டுச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள் இன்று இன்றைய அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இருக்கின்றார்கள்.

மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டே இந்நாட்டு மக்கள் எமக்கு அதிகாரங்களை வழங்கினார்கள்.ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மாத்திரம் இம்மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.அமைச்சர்களால் மாத்திரம் தனியாக மேற்கொள்ள முடியாது.நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.அக்காலத்தில் மாத்திரம் இந்நாட்டில் திருடர்கள் இருக்கவில்லை.இன்றும் திருடர்கள் உள்ளார்கள்.இன்றுள்ள திருடர்களை பிடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

நான் அமைச்சராக இல்லையென்றாலும் இச்செயன்முறையை முன்னோக்கி கொண்டுச் செல்வேன் என்பதை இன்று கூறிக்கொள்கின்றேன்.

என அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.