அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்வு

44 0

அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது.

மெய்நிகர் வழியில் குறித்த கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதுசம்பந்தமாக அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில் எமது கூட்டணியின் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.

விசேடமாக, மாவட்ட ரீதியான கிளைகளை கட்டியெழுப்புதல் மற்றும் மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராய்ந்தோம்.

விசேடமாக, வடக்கு, மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், இந்தச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதனையடுத்து நாம் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.