58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற விமான நிலைய பணிப்பெண் கைது

22 0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.

சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்  தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் விமான நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் வைத்து குறித்து பொதியை சந்தேக நபருக்கு கொடுத்ததாகவும் குறித்த  பொதியை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்தால் 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.