இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

500 0

இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கைதான மீனவர்கள் சிலாபம் – இரணவில பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

இவர்கள் கடந்த மார்ச் 3ம் திகதி “கவீச புதா 3” என்ற படகில் கடலுக்கு சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த ஏழு மீனவர்களையும் விடுவிக்க தலையீடு செய்யுமாறு, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

இதுஇவ்வாறு இருக்க, அத தெரணவிடம் கருத்து வௌியிட்ட மீனவ பணிப்பாளர் நாயகம் கிரிஸ் லால் பிரணாந்து, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.