இராணுவ முகாமில் காணாமல்போன தோட்டாக்கள் வடிகானில் கண்டுபிடிப்பு!

124 0

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில்  காணாமல்போன துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காணாமல் போன T-56 துப்பாக்கிக்கான 30 தோட்டாக்கள்  முகாமிலிருந்து நீர் வெளியேறும் வடிகானில் காணப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.