இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள தனியார் பாடசாலையான Academia Civitas இல் தரம் 6 இல் கல்வி கற்கும் 21 மாணவர்களைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை (9) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தந்தனர். அதிபர் திருமதி. அல்மாஸ் ரியாஸ் தலைமையில் இவர்கள் வருகை தந்திருந்தனர்.

மாணவர்களை பதில் உயர்ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷ்மி மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் பிற அதிகாரிகள் வரவேற்றனர். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து மாணவர்களுக்கு இதன் போது விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்களைச் சிறந்த முறையில் வரவேற்று உபசரித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு பாடசாலையின் அதிபர் நன்றியினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

