ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

127 0

மலையக ரயில் பாதையில் வட்டவளை மற்றும் ரொசெல்ல நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டியிலிருந்து வெள்ளிக்கிழமை (9) நானுஓயா நோக்கிப் பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையக பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.