உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது

324 0

பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 56 கிலோ 500 கிராம் உலோக தகடுகளையே விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக அறியவந்துள்ளது.