வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தரமரட்ண தெரிவித்தார்.யாழ். குடாநாட்டின் சிவில் நிலமை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் மாவட்ட அரச அதிபர் தலமையில் இடம்பெற்றபோது அண்மையில் இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
குறித்த விடயம் தொனர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. அதாவது அந்த சம்பவமானது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அந்தப் பகுதியில் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் அது தொடர்பில் அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் முறையிட்டதோடு 4 பேர் தொடர்பில் சந்தேக நபர்களை இனம்காட்ட முறைப்பாட்டாளரும் பொலிஸ் வாகனத்தில் வந்தார்.
இவ்வாறு வருகை தந்த முறைப்பாட்டாளர் இனம் காட்டியவர்களை கைது செய்ய முற்பட்டவேளையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் சந்தேக நபர்களை கைது செய்ய விடாது தடுத்ததோடு பொலிசாரின் வாகனம் மீதும் கல்லுகள் கொண்டு தாக்கினர். இப் பகுதியில் எப்பவுமே சந்தேக நபர்களை கைது செய்யச் சென்றால் பெண்கள் தடுக்கின்றனர். இதேநேரம் குறித்த பெண் மறுநாள் தன்னை தாக்கியதாக முறையிட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த பெண் தொடர்பான வைத்தியசான்றிதழ் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தவேளையில் அங்கு பெண்கள் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கின்றனர் எனில் ஏன் பெண் பொலிசாரை அழைத்துச் செல்லவில்லை. எனக் கேட்டபோது கைது நடவடிக்கைக்கு பெண் பொலிசாரை அழைத்துச் செல்வதில்லை . கைது செய்யவேண்டியவர் பெண் என்றால் மட்டும் பெண் பொலிசாரும் அல்லது சோதனை நடவடிக்கக்க்குமே பெண்கள் செல்வார்கள் எனத் தெரிவித்தார்.

