பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வு – ஈரான் அதிருப்தி

233 0

சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களை தடுப்பதும், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துகொண்டு அங்கு வெறியாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவது, இந்தப் படையின் தலையாய இலக்காகும்.

இந்தப் படையின் தலைவராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் பொறுப்பேற்க உள்ள நிலையில் ஈரான் அரசு ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக அதிக கவனம் எடுத்துக் கொள்வதாகவும், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளின் உறவை இது சீர் குலைத்து விடக்கூடாது எனவும் ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது போன்ற விவகாரங்களில் ஈரான் அதிருப்தி தெரிவிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.