சிரிய இரசாயனத் தாக்குதல் – பசார் அல் அசாட்டின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

189 0

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலை அந்த நாட்டின் ஜனாதிபதி பசார் அல் அசாட்டின் படையினரே நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

வடமேல் சிரியாவின் கான் செய்கோன் பகுதியில் இந்த இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 58 பேர் வரையில் பலியானதாக கூறப்படுகின்ற போதும், நூறுக்கும் அதிகமானவர்கள் பலியானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில், இந்த தாக்குதலை பசார் அல் அசாட்டின் படையினரே நடத்தினர் என்பது உறுதியாகி இருப்பதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இரசாயனத் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், சிரியாவில் ஒரே இடத்தில் நடத்தப்பட்ட பாரிய இரசாயனத் தாக்குதலாக இது அமையும்.

இதற்கு முன்னரும் இவ்வாறான தாக்குதல்களை சிரிய அரசாங்கப் படையினர் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.