ஹோமாகமயில் மலசல கூட குழியில் வீழ்ந்து பெண் பலி

170 0

ஹோமாகம பிரதேசத்தில் 8 அடி ஆளமுடைய மலசல கூட குழியில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் வீட்டிற்குள் வரும் போது குறித்த மலசல கூட குழிக்கு அருகில் இருந்து அவர்களது வளர்ப்பு நாய் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

இதனை அவதானித்த வளர்ப்பு நாயின் உரிமையாளரான குறித்த பெண் குழிக்கு அருகில் வீழ்ந்திருந்த தனது நாயை காப்பாற்றுவதற்காக சென்றிருந்த போது குழியில் இருந்து நபரொருவரின் கால் பகுதியை கண்ட நிலையில் அதனை அவதானித்துக்கொண்டிருந்த போது மலசல கூட குழிக்கு அருகில் இருந்த காங்கிரீட் தூண் உடைந்ததில் மலசல கூட குழியில் தவறி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து இவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.