யாழில் அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரப் பலகைகளை கொண்டுசென்றவர் கைது

143 0

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்கு மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுசென்றவர் திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டார்.

வன்னிப் பகுதியில் இருந்து லொறியில் தேக்கு மரப் பலகைகள் கொண்டுவரப்பட்ட போதே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.