வனப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

124 0

ஏலயாபத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (03) பிற்பகல், அந்த வனப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக ஏலயாபத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.