ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜேர்மனிய சபாநாயகர் சந்தித்தார்

300 0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபர்ட் லெம்மர்ட் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

ஜேர்மனிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி சிறப்பான வரவேற்ப்பை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின் பேரில் ஜேர்மனிய நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.