ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர்களில் யாருக்கு அதிக ஆதரவு

113 0

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் ஜேவிபியின் அனுரகுமாரதிசநாயக்கவிற்கே தொடர்ந்தும் அதிகள ஆதரவு காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்ற மக்களின் மனோநிலையை அறிவதற்காக டிசம்பர் மாதம் இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஜேவிபியின் தலைவருக்கு 50 வீதமான ஆதரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு 33 வீத ஆதரவும் ஜனாதிபதி ரணி;ல்விக்கிரமசிங்கவிற்கு 9 வீத ஆதரவும் காணப்படுவது இந்த கருத்துக்கணிப்பி;ன் மூலம் தெரியவந்துள்ளதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆளும் பொதுஜனபெரமுனவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு 8 வீத ஆதரவு காணப்படுகின்றது.

2023 நடுப்பகுதியிலிருந்து அனுரகுமாரதிசநாயக்கவி;ற்கான ஆதரவு அதிகரித்துள்ளது எனினும் டிசம்பரில் வீழ்ச்சி காணப்பட்டது ஐக்கியமக்கள் சக்தியின் தலைவருக்கான ஆதரவு 2023 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் 3 வீதத்தினால் அதிகரித்துள்ளது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது ஐஎச்பியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.