எனது விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு அமையவே பாராளுமன்ற ஊழியர்களின் கைது இடம்பெற்றது

117 0

என்னால் நியமிககப்பட்ட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டதால், அவரின் ஆலாேசனையின் பிரகாரம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி அதன் பிரகாரம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனைக்கு அமையவே பாராளுமன்ற ஊழியர்கள் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு பிரிவை்சேர்ந்த 2பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் அதன் சிரேஷ்ட ஊழியர் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தொட்ர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நான் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், 2022ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் பாராளுமன்றத்தின் வீட்டுப் பராமரிப்புத் துறையில் பல பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டதுடன் அதன் பிரகாரம், சபாநாயகரின் ஆலாேசனையின் கீழ் இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ள

உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரை குழுவின் அறிக்கை கடந்தவாரம் எனக்கு கிடைக்கப்பெற்றதுடன் அதுதொடர்பில் மேலதிக ஆலாேசனை பெற்றுக்கொள்வதற்காக அதனை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையை ஆராந்த சட்டமா அதிபர் சம்பவம் தொடர்பாக ஆரம்ப முறைப்பாடாென்றை செய்யவேண்டும் என ஆலாேசனை வழங்கி இருந்தார்.

அதன் பிரகாரம் குறித்த அறிக்கை என்னால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

அதனால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பது என்னால் நியமிககப்பட்ட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டதால், அவரின் ஆலாேசனையின் பிரகாரம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி அதன் பிரகாரம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனைக்கு அமைவாகும்.

எனவே பாராளுமன்றத்திற்குள் எந்தவொரு தரத்திலுள்ள நபரினாலும் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யும் எந்தவொரு சட்ட விரோதச் செயலுக்கும் நான் உட்பட உயர்மட்ட நிர்வாகத்தினர் நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி செயற்படத் தயங்க மாட்டோம்.