திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் தற்போதைய முன்னேற்றங்கள் தோல்வியடையும்

113 0

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து நாட்டின் ‘நிதி ஒழுக்கம்’ ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. நிதி ஒழுக்கம் முறையற்ற வகையில் செயற்படுத்தப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. பாரிய போராட்டத்துக்கு பின்னர் பொருளாதாரம் சமனிலையடைந்துள்ளது.

நிலையான  பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் தற்போதைய முன்னேற்றங்கள் தோல்வியடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பணவீக்கம் சாதாரண பிரஜையின் மிகப்பெரிய எதிரி.பணவீக்கம் 70 சதவீதத்தை அடைந்தவுடன் மக்களின் சொத்துக்களின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது. எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு பணவீக்கத்தை 05 வீதமாக நிலைப்படுத்திக் கொள்ள மத்திய வங்கியும்,அரசாங்கமும் கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அட்வகாட்டா பொருளாதார ஆய்வு நிறுவனம் திங்கட்கிழமை (29) மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாhட்டு மண்டத்தில் ஏற்பாடு செய்திருந்த ”பொருளாதார சுதந்திரம் எதிர்காலத்துக்கான சிறந்த வழி’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் தற்போது சமனிலையடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நூற்றுக்கு 70 சதவீதத்துக்கும் அதிகளவாக பதிவு செய்யப்பட்ட பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு குறைவடைந்துள்ளது.வரிசை யுகம் முடிவடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி ஸ்தீர நிலைக்கு பேணப்படுகிறது.சர்வதேச நாணய நிதியத்தின் நெறிப்படுத்தலுடன் ‘அரச நிதி ஒழுக்கம்’ ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமே எமது அரச நிதி ஒழுக்கத்தை இல்லாதொழித்துக் கொண்டோம்.அரச நிதி ஒழுக்கத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாமல்,வரையறையற்ற வகையில் நாணயம் அச்சிட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.அரச நிதி ஒழுக்கம் ஸ்திரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மொத்த வரி வருமானம் உயர்வடைந்துள்ளது.புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வரி வலையமைப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

நிதி ஒழுக்கம் முழுமையாக மாற்றமடைந்துள்ளது.நூற்றுக்கு 6 சதவீதமாக காணப்பட்ட திறைசேரி பிணைமுறிகளின் வட்டி வீதம் நூற்றுக்கு 30- 32  சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.இந்த வட்டி வீதம் தற்காலிகமாக 12,13 சதவீதமளவுக்கு குறைவடைந்துள்ளது.புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கியின் மீதான அரசியல் தலையீடுகள் நீக்கப்பட்டுள்ளன.நாணயம் அச்சிடுதல் வரையறுக்கப்பட்டு,மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் 14 பில்லியன் டொலர் அரச முறை கடன் மறுசீரமைப்பு,14 பில்லியன் டொலர் பிணைமுறி கடன்கள் மறுசீரமைப்பு குறித்து இதுவரை இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்படவில்லைபொருளாதார ஸ்தீரத்தன்மை சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக் கொள்ளும் ஒரு உத்தியாகும்.அரசியல் சவால்களுக்கு மத்தியில் குறித்தொதுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களை செயற்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டது முறையற்றது என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளோம்.பொருளாதாரத்தின் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது.அத்துடன் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.போராடுகிறர்கள்.தற்போதை ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை   உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமனிலை என்பன மீண்டும் பலவீனடையும்,நெருக்கடிக்குள்ளாகும்.மீண்டும் சமூக போராட்டம் வெடிக்கும்.

நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வே;ண்டும்.பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும்.தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும். பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களை செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும்.வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது, நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாக காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாக பேண முடியாது.

நிதி கொள்ளை அரசியல் தலையீடுகளினால் ஒழுக்கமில்லாமல் செயற்படுத்தப்பட்டமை பொருளாதார பாதிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பணவீக்கமே சாதாரண பிரஜையின் மிக பெரிய எதிரி.பணவீக்கம் 70 சதவீதத்தை அடைந்தவுடன் மக்களின் சொத்துக்களின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது.ஆகவே அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் நிதி கொள்கை ஒழுக்கமான முறையில் பேணப்பட வேண்டும்.

எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு பணவீக்கத்தை 05 வீதமாக நிலைப்படுத்திக் கொள்ள மத்திய வங்கியும்,அரசாங்கமும் கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.புதிய மத்திய வங்கி சட்டமூலத்துக்கு அமைய பணவீக்கத்தை தீர்மானம் அதிகாரம் மத்திய வங்கிக்கு வழங்கப்படவில்லை.பணவீக்கத்தை அரசாங்கமே தீர்மானிக்க முடியும்.

ஊழல் மோடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பது திட்டவட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது நீடிக்கப்பட்ட கடன் தொகையை பெற வேண்டுமாயின் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரச தரப்பினர் அனைவரும் தமது சொத்து விபரங்களை பொது வலைத்தளத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே நிலையான பொருளாதார மீட்சிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.