அதிவேக வீதிகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்கு அனைவரும் கவனமாக செயற்படவேண்டும்- சமிதா சிறிதுங்க

159 0

நேரத்தை மீதப்படுத்துவதை கருத்திற்கொண்டு, அதி வேகமாக வாகனம் செலுத்துவதால், அதிவேக வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

‘பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்துவதே, இந்த விபத்துக்களுக்கு காரணமாகும். 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதிவேக வீதிகளில், போக்குவரத்து விபத்துக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பதை அவதானித்துள்ளோம். எனவே, அதிவேக வீதிகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்கு, அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க குறிப்பிட்டுள்ளார்.