போதைப்பொருள் கடத்தல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

166 0

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேக நபர்கள் மற்றும் கைதிகளுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கைதிகளுக்கு, எதிர்வரும் காலங்களில், பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.

9 சிறைச்சாலைகளில் புனர்வாழ்வுப் பிரிவுகள் இயங்கி வருவதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைகளில் தங்கியிருந்து, பல்வேறு தொழில்களை மேற்கொள்கின்றமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.
என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.