இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாகநேற்று (25) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில் போலப் பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.