வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 83 இலட்சம் ரூபாவும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு பெண் குளியாப்பிட்டிய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா – எல, கொஸ்பலான ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு எதிராக ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

