மோட்டார் சைக்கிளில் மோதி பாதசாரி உயிரிழப்பு ; கட்டுபொத்தவில் சம்பவம் !

174 0

குருணாகல் – கட்டுபொத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் மோதப்பட்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது கட்டுபொத்த , நெத்திபொல கெதர பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் தெற்கு பகுதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் கட்டுபொத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுபொத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.