பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

146 0

பெலியத்தை  பிரதேசத்தில் ஐவரைக்  சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களைக் கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உதவவுள்ளதாக பொலிஸார் கூறினர்.