இலங்கையின் உத்தேச இணையசட்டம் எதிர்வரும் தேர்தல்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது

154 0

இலங்கையின் உத்தேச இணையசட்டம் எதிர்வரும் தேர்தல்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அவசரமாக கொண்டுவர முயற்சிக்கும் அடக்குமுறையான புதிய இணைய சட்டம் நீண்டகால தண்டனையை வழங்க பேச்சுக்கள் கருத்துக்கள் தொடர்பிலான கூடிய பரந்த மற்றும் தெளிவற்ற குற்றங்களை உருவாக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்த வருடத்தின் பிற்பகுதியில் ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்தலிற்கு தயாராகிவரும் நிலையில் இந்த சட்டம் கருத்துவெளிப்பாட்டுசுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்ற உத்தேச சட்டமூலம் இணையவழி துன்புறுத்தல்கள் மோசடி துஸ்பிரயோகம் போன்றவற்றிற்கு எதிராக  பாதுகாப்பை வழங்குகின்றது என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது புதிய இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவை ஏற்படுத்துவதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிப்பார் குறிப்பிட்ட ஆணைக்குழு இணையத்தில் வெளியாகியுள்ள தவறான பாதகமான தகவல் என தீர்மானித்து அதனை அகற்றலாம் எனவும் சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆணைக்குழு கட்டுப்படுத்தலாம் இணையத்தை பயன்படுத்துவதை தடை செய்யலாம் தனிநபர்கள் அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட நிபுணர்களிற்கு சந்தேகநபர்களின் வீடுகள் அலுவலகங்களை சோதனையிடுவதற்காக  அதிகாரம் வழங்கப்படும் கடும் அபராதம் ஐந்து வருட சிறைத்தண்டனை போன்றவற்றை விதிக்கலாம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.