படகு கடத்தப்பட்டு 3 மீனவர்கள் கொலை : 7 பேருக்கு மரணதண்டனை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றம்!

167 0

மீன்பிடி படகு ஒன்றைக் கடத்திச் சென்று  மூன்று மீனவர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளாகக்  காணப்பட்ட  7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கடத்தில் சம்பவம் கடந்த 2012ஆம் ஆண்டு  இடம்பெற்றிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தீர்ப்புக்காக  இன்று புதன்கிழமை (24) எடுத்துக் கொள்ளப்பட்டபோது  நீதிபதி ஆதித்ய படபாண்டி  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வழக்கின் 10 ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த நபரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கான மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமான ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு தலா  29 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.