வாழைச்சேனையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு வர்த்தகர் உயிரிழப்பு

176 0

வாழைச்சேனை, வெலிகந்த செவனப்பிட்டிய நகருக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் வர்த்தகர்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று புதன்கிழமை (24) வியாபாரம் செய்யச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விநாயகபுரம்,  பகுதியைச் சேர்ந்த  48  வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையான முருகேசு முனியாண்டி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

செவனப்பிட்டி சந்தைக்கு தனது குடும்பத்துடன்  பொருட்களை விற்பனை செய்வதற்காக  அவர் சென்று கொண்டிருந்தபோதே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.