மட்டக்களப்பில் வெள்ளத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 84 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிந்தன!

69 0

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெற்செய்கையிடப்பட்ட சுமார் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 35 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையிடப்பட்டுள்ளது.

வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, செங்கலடி, கிரான், வவுணதீவு, வாகரை உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் செய்கையிடப்பட்ட பெரும்போக நெற்பயிர்கள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.