பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளன.

229 0

காய்ச்சல் பரவல் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உபுல் பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒருவகையான காய்ச்சல் பரவுகின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இன்றுடன் அனைத்து பீடங்களும் மறு திகதி அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் தீவிரிமடைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதக் காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்ளிட்ட 17 பேர் இந்த நோயினால் மத்திய மாகாணத்தில் உயிரிழந்தனர்.

காய்ச்சல் மற்றும் இருமல் மற்றும் தடிமல் ஆகிய நோய்கள் இருக்கும் பட்சத்தில், உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.