வடக்கில் 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் தொடர்பாக வட மாகாணத்தில் 2211 வழக்குகள் பதியப்பட்டுள்ளன

442 0
சிறுவர் தொடர்பான வழக்குகள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளதாக வட மாகாண சிறுவர் திணைக்கப் பணிப்பாளர் தி.விஸ்வரூபன் தெரிவித்தார்.
வடக்கில் உள்ள சகல சிறுவர் இல்ல முகாமையாளர்களிற்கான சந்திப்பு ஒன்று திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தகவலையும் பணிப்பாளர் தெரிவித்தார்.இதன்போது வட வட மாகாண சிறுவர் திணைக்கப் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தில் உள்ள 09 நீதிமன்றங்களில்   சிறுவர் தொடர்பான வழக்குகள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளது. இதில் கூடிய தொகையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 1116 வழக்குகள் இட்பெற்றுள்ளன. இதில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் 92 வழக்குகளும் , பருத்தித்துறையில் 318 வழக்குகளும் , யாழ்பாணம் நீதிமன்றில் 280 வழக்குகளும் , சாவகச்சேரி நீதிமன்றத்தில் 79 வழக்குகளும் இடம்பெற்றுள்ளதோடு மல்லாகம் நீதிமன்றத்தில் 347 வழக்குகளுமாகவே மொத்தம் 1116 வழக்குகளும் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை வவுனியா நீதிமன்றத்தில் 493 வழக்குகளும் , மன்னார் நீதிமன்றத்தில் 393 வழக்குகளும் , கிளிநொச்சியில் 89 வழக்குகளும் , முல்லைத்தீவு நீதிமன்றத்தில் 120 வழக்குகளும் இடம்பெற்றுள்ளது.்இந்த வகையிலேயே மொத்தமாக 2211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறுவர்  பாலியல் ரீதியிலான வழக்குகள் 180 , சிறுவர் திருமணம் 61 என்பனவும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டார்.