குறித்த வீதி இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி பதுளை – பண்டாரவளை வீதி ஏழாம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
வீதியில் காணப்பட்ட பாறைகள் மற்றும் மரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றி, பள்ளங்கள் மற்றும் விரிசல்களை சரிசெய்ததன் பின்னர், தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் புவியியலாளர்கள் வீதி பயணிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா என சோதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

