சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை!

202 0

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை  மேன்முறையீட்டு நீதிமன்றம்  இன்று (16) பிணையில் விடுவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இரத்தினபுரியில் அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதை தவிர்க்குமாறு கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.