இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார தொழிலாளர்கள் அனைவரும் இவ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கதிரியக்க பிரிவு, ஆய்வு கூட தொழில்நுட்ப பிரிவு, மருந்து வழங்கல் பிரிவு உட்பட அனைத்து வைத்திய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைக்காக வந்த பலர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.






