முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

232 0

இந்த சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை – மெதகும்புர மத்திய பிரிவில் நேற்று (02) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலுசாமி விஜயராஜ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த போது, வெளிச்சத்திற்காக உபயோகிக்கப்பட்ட மின்குமிழில் இருந்து மின்சாரம் தாக்கியதால் இவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.