குறித்த சொகுசுக் கப்பல் மாலைதீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மர்ஷல் தீவுகளின் கொடியுடன் வருகை தந்த ரிவேரா என்ற சொகுசுக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அடங்கியுள்ளனர்.
கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்தை திங்கட்கிழமை (15) அதிகாலை ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் வந்தடைந்துள்ளது.