தெஹிவளையில் இணையவழி கடன் மோசடி கும்பல்

140 0
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள இணையவழி கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த  சீன பிரஜைகள் உட்பட 6 சந்தேக நபர்கள் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 21 கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய இணையவழி கடன் மோசடி தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.