பிளாஸ்டிக் துடைப்பங்கள், தும்புத்தடிகளுக்கு தடை வருமா?

146 0

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் தும்புத்தடிகளின் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைக் குழுவில் மத்திய சுற்றாடல் அதிகார சபை இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என மேற்படி குழுவின் தலைவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ஞ் ஷீட் பாவனையை தடை செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்ககது.