நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டவர் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்திலும் வித்தியாசமாக எதுவும் இடம்பெறவில்லை.
எனினும் செவ்வாய்கிழமை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரை சந்திக்க முடிந்ததால் ஆச்சரியமடைந்தனர்.
ஜனாதிபதி தனது வழமையான பணிகளில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு அங்கு சென்றார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத்பொன்சேகா சரிதஹேரத் வசந்த யாப்பா நிமால் லான்சா வேலுகுமார் ஆகியோர் அவரை எதிர்கொள்ளநேர்ந்தது.
நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவித்துவீட்டீர்கள்தானே என சரித ஹேரத் கேள்விஎழுப்பினார் அதற்கு ஜனாதிபதி இல்லை இல்லை நான் இன்னமும்அதனை அறிவிக்கவில்லை அது தவறான எண்ணம் என தெரிவித்தார்.
என்னை வேட்பாளராக அறிவிப்பதென்றால் முதலில் தேர்தல்கள் குறித்தஅறிவிப்பு வெளியாகவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன் பின்னர்பல கேள்விகள் கேட்கப்பட்டதால் அந்த பகுதி செய்தியாளர் மாநாடு போல காணப்பட்டது.
நீங்கள் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கபோகின்றீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆம் என பதிலளித்தஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவும் தேசிய சுதந்திர தினத்திற்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப்ரவரி ஐந்தாம் திகதி உங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றீர்களா என்ற கேள்விக்கு அவர் எனது பிரச்சாரம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 26ம் திகதி நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தின் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஜனாதிபதி செயலகம் வர்த்தமானிஅறிவித்தலை வெளியிடும்.
பெப்ரவரி ஏழாம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் .
கடந்தகாலங்களை போல ஜனாதிபதி இம்முறை பெப்ரவரி4ம் திகதி சுதந்திர தின உரையை நிகழ்த்தமாட்டார் -அவர் இராணுவ பொலிஸ் அணிவகுப்பில் கௌரவவிருந்தினராக கலந்துகொள்வார்,
நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் சம்பிராதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தபின்னர் அவர் ஆற்றும் கொள்கை விளக்கவுரையே நாட்டிற்கான செய்தியாக காணப்படும். இந்த உரையில் ஜனாதிபதிபொருளாதார மீட்சிமற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்குறித்து குறிப்பிடுவார்.

